நொய்டா பகுதிகளில் ஆரோக்யசேது ஆப் இல்லாமல் பொது இடங்களுக்கு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் குறித்து அறிந்துகொள்வதற்கு, கொரோனா பாதிக்கப்பட்ட நபர், நாம் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மத்தியஅரசு ஆரோக்கிய சேது என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது. அந்த ஆப்பை அனைவரையும் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைல் போனில் ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் பொது இடங்களுக்கு மக்கள்வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் இருப்பது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசு, பொதுத்துறை, தனியார்நிறுவன ஊழியர்கள் கட்டாயம் ஆரோக்ய சேது ஆப்பை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்துவைத்திருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

Comments are closed.