பசுக்களை நேசிப்பவர்கள், தங்களது உணர்வுகள் காயப்படுத்தப் பட்டாலும், வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத் கூறினார்.


கடந்த சிலமாதங்களாக, பசு பாதுகாவலர்கள் என்றபெயரில் சில கும்பல்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறினார்.


6 நாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றுள்ள அவர், ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜாம்டோலி என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் குறித்து தொண்டர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியதாவது: பசுக்களை நேசிப்பவர்கள், தாங்களாகவே அவற்றை வளர்த்து, பராமரித்து வருகிறார்கள். அவர்கள், தங்களது உணர்வுகள் காயப்படுத்தப் பட்டாலும் வன்முறையைக் கையிலெடுக்க மாட்டார்கள் என்றார் மோகன்பாகவத்.
சீனத்தயாரிப்புகள் குறித்து மற்றொரு தொண்டர் எழுப்பினார். அதற்கு, ''உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால், சிறிய தொழிற் சாலைகளில் பணிபுரியும் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது; மேலும், உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன் படுத்துவதால் திருப்தியும் கிடைக்கிறது'' என்று மோகன் பாகவத் பதிலளித்தார்.

Leave a Reply