பசுப் பாதுகாப்பு என்றபெயரில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், பிரதமர் நரேந்திரமோடி, 'பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதியைக் குலைப்பவர்களுக்கு எதிராக, மாநில அரசுகள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்' என தெரிவித்துள்ளார்.

மேலும், 'சட்டம் ஒழுங்கைக் காப்பது மாநில அரசுகளின்கடமை. சமூக விரோதக்கும்பலுக்கு எதிராக மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும். பசு என்பது ஒரு தாய்போலத்தான். அதைக்காக்க சட்டம் இருக்கிறது. எனவே, பசுவைக் காப்பேன் என்ற பெயரில்சட்டத்தை மீறக்கூடாது. நாட்டில் நிலவிவரும் அமைதியான சூழலைக் குலைப்பதற்கு சில கும்பல்கள் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறியுள்ளார். 

Leave a Reply