குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்றசிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஈ.வெ.ரா சிலைகள் உயிருள்ள சிலைகளா என  கனிமொழிக்கு பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

பட்டேல்சிலை விவகாரம் தொடர்பாக, கனிமொழி மற்றும் ஹெச்.ராஜாவுக்கும் இடையே டுவிட்டரில் காரசார வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. 

கனிமொழி  வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உயிரற்ற படேல் சிலைக்கு ரூ.3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜாபுயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு ரூ.350 கோடியாம் என பதிவிட்டிருந்தார். 

இதையடுத்து கொதித்தெழுந்த ஹெச்.ராஜா,  சிலைகளுக்கு உயிர் உள்ளதா, இல்லை என்று தனக்கே உரித்தான விதத்தில் குஜராத்தில் உள்ள படேல்சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply