பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாளை தாக்கல் செய்யப் பட உள்ள பட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு சிறந்த கூட்டத் தொடராக அமைய வலிமையாக அடித்தளம் அமைப்பதாக இருக்கும். இந்த கூட்டத் தொடர் குறிப்பாக பொருளாதாரம் , மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதாக இருக்கும். இருஅவைகளிலும் ஆக்கப் பூர்வமாக விவாதங்கள் நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

2020 ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், இதில் எடுக்கப்படும் முயற்சிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பான அடித்தளம் அமைப்பதாக இருக்கவேண்டும். இவ்வாறு மோடி கேட்டுக் கொண்டுள்ளார்

Comments are closed.