வரலாற்று சிறப்புமிகுந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது பல்வேறு பரிமாணங்கள் கொண்ட வெற்றியை பெற்றுள்ளது. தீவிரவாதம் மற்றும் மாவோயிஸத்துக்கு பலத்தஅடி கொடுத்துள்ளது.

நான் பிரதமராக பதவியேற்ற போது நமது நாடு ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தில் சிக்குண்டு தவித்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை நமது நாட்டில் இதற்கு முன் எடுக்கப்படாத ஒன்று. சுதந்திர இந்தியாவில் அதுபற்றி சிந்திக்கப்படவே இல்லை.

ஊழல், கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிரான இந்தப் போரில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்கமுடியும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான இந்தப்போரில் சிறு துன்பங்களை மக்கள் பொருட்படுத்த வில்லை.

தீவிரவாதம், நக்சலிசத்துக்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை பலத்த அடி கொடுத்துள்ளது. காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் 75 சதவீதம் குறைந்தன. நக்சல்தீவிரவாதம் 20 சதவீதம் குறைந்துள்ளது. ரூ.7.62 லட்சம் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டன.

ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கு மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை தொடர்ந்து ஆதரித்துவரும் நாட்டு மக்களுக்கு தலைவணங்குகிறேன். 125 கோடி இந்தியர்கள் இந்தப் போரில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தியமக்கள் தொகையில் 0.00011 சதவீத மக்கள் மொத்தப்பணத்தில் 33 சதவீத அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். 23.22 லட்சம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ.3.68 லட்சம் கோடி சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது.

இந்திய நிதிகட்டமைப்பை தூய்மைப் படுத்த எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையே பண மதிப்பு நீக்க நடவடிக்கை. ஹவாலா மற்றும் கறுப்புபணப் புழக்கத்தில் ஈடுபடும் போலி நிறுவனங்கள் இதனால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. போலி நிறுவனங்களுக்கு எதிராக துல்லியத்தாக்குதல் இதுவாகும். தற்போது 2.24 லட்சம் போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 58 ஆயிரம் வங்கிக்கணக்குகள் மூலமாக ரூ.17 ஆயிரம் கோடி பரிவர்த்தனை நடத்திய 35 ஆயிரம் நிறுவனங்கள் சிக்கியுள்ளன.

பணப் பரிவர்த்தனையை முறைப் படுத்துவதற்கான மிகப்பெரிய நடவடிக்கையே பண மதிப்பு நீக்கம். இதனால் தொழிலாளர்களின் சம்பளத்தை அவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைப்பது அதிகரித்துள்ளது. இதனால் 1.01 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் புதிதாக இணைக்கப் பட்டுள்ளனர். 1.3 கோடி தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ மருத்துவ பயனாளிகளாக இணைந்துள்ளனர்.

வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2015-16-ல் 66.53 லட்சமாக இருந்தது. இது 2016-17-ல் 84.21 லட்சமாக, அதாவது 26.6 சதவீதம் உயர்ந் துள்ளது.

2016 ஆகஸ்ட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 87 கோடியாக இருந்தது. இது, 2017 ஆகஸ்ட்டில் 138 கோடியாக உயர்ந்தது. பணமதிப்பு நீக்கத்தால் மக்கள் பல்வேறு பலன்களை அடைந் துள்ளனர். கடன் களுக்கான வட்டிவிகிதம் குறைந்தது, வீட்டு மனைகள் விலைவீழ்ச்சி, உள்ளாட்சி அமைப்புகளின் வருமானம் உயர்வுபோன்ற பலன்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட் டுள்ளார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு அளித்ததற்காக பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து கூறியது.

Leave a Reply