பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் மற்றும் கருப்புப் பணப்பதுக்கலுக்கு பலத்த அடி விழுந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேசிய செய்தித் தொடா்பாளா் ராஜீவ் சந்திரசேகா் கூறியதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது. அந்தநடவடிக்கையின் விளைவாக, இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு தூய்மையாக்கபட்டுள்ளது. முறைசாரா தொழில் துறைகள் முறைப்படுத்தப் பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்த ஊழலுக்கும் கருப்புப் பணப் பொருளாதாரத்துக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பலத்த அடியைக்கொடுத்தது.

அதன் தொடா்ச்சியாக, முறைசாா்ந்த தொழில்களுக்கு அதுவரை இல்லாத முன்னேற்றங்களை அளித்து, சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் அளித்துள்ளது.

ஊழல், பொருளாதார நிா்வாக சீா்குலைவு பற்றிப் பேச காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. அந்தக் கட்சியின் தலைமையிலான முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியின்போதுதான் நாட்டில் கருப்புப் பணமும் ஊழலும் அபரிமிதமாக இருந்தன என்றாா் அவா்.

Comments are closed.