நாடுமுழுவதும் பணமில்லா பரிவர்த்தனை 2022-ம் ஆண்டுக்குள் சாத்தியமாகவேண்டும்  உலகில் பணமில்லா பரிவர்த்தனைக்கு பலநாடுகள் மாறியுள்ளன. இந்தியாவிலும் டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனையை படிப்படியாக மக்கள் ஏற்கத்தொடங்கியுள்ளனர். இதனால் நமது நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாக்கும் இலக்கை கொண்டுள்ளோம். இதற்கு நாட்டு மக்களின் முழு ஒத்துழைப்பை எதிர்ப் பார்க்கிறோம்.


 பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழலுக்கு கடிவாளம்: 2016-ம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசு எடுத்த போது பலரும் ஏன் இதைசெய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இந்தமுடிவை பிரதமர் எதற்காக எடுத்தார் என்று தினமும் என்னைகேட்டனர்.
 மத்திய அரசு எடுத்த சில உறுதியான நடவடிக்கையால் ஊழல் வாதிகள், கருப்புப் பணப் பதுக்கல்காரர்கள் திடுக்கிட்டார்கள். இந்தநடவடிக்கை அவர்களை வாட்டியதால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தார்கள்.


 நாடு டிஜிட்டல் மயமாகிவருவதால் ஊழலுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என்பதை யாரும் மறக்கக்கூடாது. நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார பரிவர்த்தனைகள் குறித்து பேசிவருவது நல்லவிளைவாகும். ஏழைகளுக்கு அரசின் பலதிட்டங்கள் குறித்து சரியாகத் தெரிவதில்லை. படித்தவர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முனைப்போடு செயலாற்றவேண்டும்.

2022-ஆம் ஆண்டில் நாடுவிடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. உலகளவில் நீரின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, "ஒரு நீர்த்துளி, கூடுதல் விளைச்சல்' என்ற இலக்கை அடைய அனைவரும் கைகோர்க்க வேண்டும்.


 நீரில்லா உலகம் அமைவதற்கு முன்பு எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும். ஒருதுளி நீரை பயன்படுத்துவதற்கு முன்பாக 10 முறை யோசிக்கவேண்டும். நீரின் நன்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


 2020-ஆம் ஆண்டுக்குள் விவசாயத்தில் பயன் படுத்தப்படும் யூரியா உரத்தின் அளவை 50 சதவீதமாகக் குறைத்து, இயற்கை வேளாண்மையில் ஈடுபட தொடங்க வேண்டும்.
 இயற்கை வேளாண்மை தேவை: இயற்கை வேளாண் மையில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பதை தர்மஸ் தலா ஊரக வளர்ச்சி திட்டத்தில் நிரூபித்திருக் கிறார்கள். இயற்கை வேளாண்மையால் பலநன்மைகள் இருக்கின்றன. நமது முன்னோர்கள் அளித்த மகத்துவங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வது அல்லது விட்டுசெல்வது வெறும் வாய்ச்சொல்லாக இருக்கக்கூடாது.


 சிறந்தவற்றை அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுசெல்லவேண்டும் என்ற உணர்வை பெற வேண்டும். புவித்தாய்க்கு நமது நன்றிக்கடனை காண்பிக்கும் காலம் கனிந்துள்ளது. இந்தப் பணியில் கடமையாற்ற அனைவரும் ஆர்வம் காட்டவேண்டும்

 கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட தென்கன்னட மாவட்டத்தின் தர்மஸ்தலா அருகேயுள்ள உஜிரே கிராமத்தில் ஸ்ரீúக்ஷத்ரா தர்மஸ்தலா அறக்கட்டளைசார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அப்போது ஊரக வளர்ச்சித் திட்டத்தின்கீழ் "ரூபே' அட்டை வழங்கல், டிஜிட்டல்மய மாக்கப்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர் பரிவர்த்தனை திட்டம், தாய்பூமியை பாதுகாப்போம் எனும் பரப்புரை திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கிவைத்து, நரேந்திர-மோடி பேசியது:-

Leave a Reply