21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கங்கள்வென்ற இந்தியவீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

21வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 11 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியவீரர் மற்றும் வீராங்கனைகள் 66 பதக்கங்கள் குவித்துள்ளனர்.

26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியவர்கள் 11 புதிய உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். இன்று நடைபெறும் நிறைவு விழா அணிவகுப்பில் இந்தியவீரர்கள் மற்றும் வீராங்கனைகள் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் பங்கேற்கின்றனர்.


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். "காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்தியவீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி இந்தியர்களை பெருமைப்படுத்தி உள்ளனர்" என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

Leave a Reply