மகாராஷ்டிராத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில், அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- 105 இடங்களையும், சிவசேனா- 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி- 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி- 44 இடங்களையும், இதரகட்சிகள்- 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களிலும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையை பெற்றபோதிலும், சிவசேனாவின் திடீர் முதல்வர் பதவி ஆசையால் இழுபறி நீடித்தது பாஜக சிவசேனாவுக்கு முதல்வர் பதவியில் விட்டுத்தர வேண்டும், இருவரும் இரண்டரை வருடம் மாறி மாறி ஆட்சி செய்யலாம் என்று திடீர் நிபந்தனை விதித்தது சிவசேனா. இதை பாஜக ஒப்புக்கொள்ளவில்லை இதனைத்தொடர்ந்து சிவசேனா பதவிக்காக தடம் மாறி மாறியுள்ளது

யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ, யாரை ஊழல்வாதி என்றார்களோ,  பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக யார் ஆதரவுதந்தார்களோ  அவர்களுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது.

 

இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் இன்று (11/11/2019) தனது அமைச்சர்பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் தொடர்ச்சியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்து, கூட்டணி தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட உத்தவ் தாக்கரே, ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று சோனியாந்தி உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியில் அங்கம்வகிக்கும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியை வழங்கவும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணைமுதல்வர் பதவியை வழங்கவும் சிவசேனா திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன.

Comments are closed.