மத்திய, மாநில அரசுகள் தங்கள்துறைகளில் பணியாற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவு ஊழியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கும்போது அவர்களுக்கு உரியகோட்டா முறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆணை பிறப்பித்தது.

மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு துறைகளுக்கும் இந்த ஆணையை மத்திய அரசு ஊழியர் நல அமைச்சகம் அனுப்பி உள்ளது.

யூனியன் பிரதேசங்களும் இந்தஆணையை நிறைவேற்ற வேண்டும்.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு ஏற்ப மத்திய ஊழியர் நலஅமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே இந்த ஆணையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளும் துறைதலைவர்களும் பதவி உயர்வு பொருப்புகளை கண்காணிப்பவர்களும் மத்திய அரசு ஆணை நிறைவேற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும் என மத்திய ஊழியர் நல துறை குறிப்பிட்டுள்ளது.

2015ம் ஆண்டில் இருந்து எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கான பதவி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply