தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான பஞ்சாப்மாநிலம் பதான்கோட் விமான படைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆய்வு மேற்ககொண்டார்.

முன்னதாக விமானப் படை மற்றும் ராணுவ உயரதிகாரிகளுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தேசியபுலனாய்வு அமைப்பும், ராணுவமும் திரட்டியுள்ள ஆதாரத்தின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகவட்டாரம் தெரிவிக்கின்றது.

பிரதமர் வருகையை ஒட்டி பதான் கோட்டில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, கடந்த 5-ம் தேதி மத்திய அமைச்சர் மனோகர்பரிக்கர் பதான்கோட்டில் ஆய்வுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply