கேரளாவில் சபரிமலை இருக்ககூடிய பத்தனம்திட்டா லோக் சபா தொகுதியின் வேட்பாளராக கேரள பாஜக பொதுச் செயலாளர் கே. சுரேந்திரன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். லோக் சபா தேர்தலுக்கு இந்தியாமுழுக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகிவருகிறது.

பாஜக தற்போது அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் விடுபட்ட பலபெயர்கள் பாஜகவின் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

பத்தனம்திட்டா தொகுதியில் தான் சபரிமலை கோவில் இருக்கிறது. இங்கு காங்கிரஸ்கட்சி சேர்ந்த ஆண்டோ ஆண்டனி தற்போது எம்பியாக இருக்கிறார். இந்த நிலையில் இங்குமட்டுமே பாஜக வேட்பாளரை அறிவிக்காமல் போனது பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. சபரிமலை போராட்டத்திற்க பின் பாஜகவின் வாக்கு வங்கி கேரளாவில் அதிகமாகி இருப்பதாக கூறப்படுவதால், இந்த தொகுதி பெரிய எதிர்பார்ப்பை பெறுகிறது.

தற்போது பத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கேரள பாஜகவின் பொதுசெயலாளர் ஆவார். இவர் கேரளாவில் பாஜக கட்சியின் முகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் அதிககவனம் பெற்ற வேட்பாளர் இவர்.

சபரிமலை போராட்டத்தை இவர்தான் முன்னின்று நடத்தினார். சபரிமலை போராட்டத்தின்போதே இவர் கைது செய்யப்பட்டார். சபரிமலைக்காக வரிசையாக பலபோராட்டங்களை நடத்தி இவர் அப்போது சிறையில் சிலநாட்கள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply