ஊடகத்துறையில் தொழில்நுட்பம் அபாரவளர்ச்சி பெற்றுள்ளது, பத்திரிகைகளின் கவனம் மக்களை சுற்றியே இருக்கவேண்டும் ., சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்தமழை குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு முழுஉதவி செய்யும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். இன்று எத்தனை செய்திசேனல் வந்தாலும் மக்கள் காலையில் கையில் காப்பி, டீயுடன் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை மாற்றவில்லை. பத்திரிகைகள் செய்திமட்டும் தருவதில்லை. திசைகளையும், உலகையும் காட்டும்கருவியாக உள்ளன. ஜனநாயகத்தில் பத்திரிகை முக்கியபங்கு வகிக்கிறது. பல மொழிகள் பேசும் இந்தியாவில் மாநிலமொழி பத்திரிகைகள் அவசியம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பத்திரிகைகள் நமது நாட்டின் சுதந்திரத்திற்கு காரணமாக இருந்தன.

ஊடகத் துறையில் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. பத்திரிகைகள் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பவை பத்திரிகைகள். சமூகத்தின் மனசாட்சியாக பத்திரிகைகள் உள்ளன. பத்திரிகைகள் அரசைசுற்றியே இருக்கின்றன. பத்திரிகைகளின் கவனம் 125 கோடி மக்களைசுற்றியே இருக்க வேண்டும் , தூய்மை இந்தியா திட்டத்திற்கு பத்திரிகைகள் உதவிட வேண்டும். வணக்கம் !

 தினத் தந்தி நாளிதழ் பவள விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியது

Leave a Reply