சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை நாட்டுமக்கள் நினைவு கூற குடியரசு தினம் ஒருவாய்ப்பாக அமைந்துள்ளது. வரும் அக்., 2 அன்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளோம். அவரது கொள்கைகளை புரிந்து கொள்ளவும், அதனை ஏற்றுகொண்டு பின்பற்றவும் இந்தஆண்டு உலக நாடுகளுக்கு பெரியவாய்ப்பு கிடைத்து உள்ளது.

இந்த ஆண்டு, அனைத்து குடிமகன்களுக்கும் தங்களது மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்ற வாய்ப்புகிடைத்து உள்ளது. வரும் 17 வது லோக்சபா தேர்தலில், நமது வாக்குரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும். 21 ம் நூற்றாண்டில் பிறந்த வாக்காளர்கள் முதல்முறையாக ஓட்டளிக்க உள்ளனர்.

கல்வி, கலை, மருத்துவம், விளையாட்டை தாண்டி, நமது நாட்டு பெண்கள், முப்படையில் தங்களுக்கென அடையாளத்தை உருவாக்குகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை காட்டிலும் மாணவியர் அதிக பதக்கம் பெறுகின்றனர்.

இந்தியா முக்கிய கால கட்டத்தில் உள்ளது. இன்று எடுக்கும் முடிவு எதிர்காலத்தை முடிவுசெய்யும். பன்முகத்தன்மை இந்தியாவின் பலம். இந்தியாவின் வெற்றி, உலகநாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. நமது நாடு நீண்டபாதையில் சென்றுள்ளது. ஆனால், இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. புதிய இலக்குகள் மற்றும் சாதனைகளை நிர்ணயிக்க வேண்டும்.

நமதுமகன்கள் மற்றும் மகள்களின் போட்டி மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். பொதுசேவைக்கு நமது கலாசாரம், பாரம்பரியம், கொள்கை முக்கியத்துவம் தருகிறது. தனி சமூக பணியில் உள்ள தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மதிக்க வேண்டும்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Tags:

Leave a Reply