பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாட்டு உறவை பலப்படுத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் ஆன்டோனியோ கோஸ்டாவை சந்தித்துபேசினார். தொடர்ந்து அறிவியல், விண்வெளி , வரிவிதிப்பு உள்ளிட்ட இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

இருநாட்டு மக்களுக்கு உதவும் வகையில் இந்தி- போர்ச்சுக்கீசிய மொழிஅகராதி உருவாக்கப்படுகிறது.இந்தித் திரைப்படங்கள் போர்ச்சுக்கீசியமொழி தலைப்புகளுடன் அந்நாட்டில் திரையிடப்படுகின்றன.பயங்கர வாதத்திற்கு எதிராக இருநாட்டு உறவை பலப்படுத்த உறுதி எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா., பாதுகாப்புகவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ஆவதற்கு போர்ச்சுக்கல் ஆதரவு அளித்ததற்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

 

முன்னதாக, பிரதமர் மோடிக்கு போர்ச்சுக்கல் பிரதமர் ஆன்டோனியோ கோஸ்டா மதியவிருந்து அளித்தார். அதில், குஜராத்தின் ஸ்பெஷல் உணவுகள் இருந்ததை கண்டு மோடி ஆச்சரியம் அடைந்தார்.
குஜராத்மாநிலத்தின் ஆகு சாக் மற்றும் மேங்கோ ஷ்ரீகண்ட் உள்ளிட்ட ஸ்பெஷல் உணவுகளுடன் சாக்கோப்டா, ராஜ்மா அவுர் மகாய், டர்கா தால், கேசர் ரைஸ், பரந்தா, ரொட்டி, பப்பாட், குலாப்ஜாமுன் உள்ளிட்ட சிறப்பு உணவுகளையும் ஏற்பாடுசெய்திருந்தனர்.

Leave a Reply