பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை புகழாரம் சூட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் மானத்தைகாக்கும் வகையில், தீவிரவாதிகள் மீது நமது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்மூலம், இந்தியா வலிமை மிகுந்தநாடு என்பதை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிரூபித்துள்ளது . உலகளவில் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல் ஓங்கி ஒலிக்கிறது.

அதிமுகவுக்கு என்று கொள்கை உள்ளது. கொள்கைகளை விட்டுக்க கொடுக்க வில்லை. தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைத்துள்ளோம். காங்கிரஸ். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதுதேர்தலுக்கான கூட்டணி. கொள்கைக்காக ஒன்று சேர்ந்த கூட்டணி கிடையாது.

பாஜகவை வளர்ப்பதற்காக எங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. தீவிரவாதிகள் பதில் தாக்குதல்நடத்தினால் அதை சந்திக்க திறமை இந்திய ராணுவத்திடம் உள்ளது. பாகிஸ்தான் ஓவ்வொரு போரிலும் தோல்விதான் அடைந்துள்ளது. இந்தியா தனது வலிமையை, திறமையை இப்போது காண்பித் துள்ளது். உலக அரங்கில் பயங்கரவாத்த்தை அழிக்கவேண்டும் என குரல் எழும்பி வருகிறது. அதற்கு மோடி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளார்

Leave a Reply