பயங்கரவாதத்தை முறியடிக்க பிராந்திய அளவில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப் படுவதாக பிரதம‌ர் நரே‌ந்திரமோடி பேசியுள்ளார்.

பிலிப்பை‌‌ன்ஸ் தலை நகர் மணிலாவில் நடைபெறும் ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பயங்கர வாதத்தை சமாளிக்க தனித் தனியாக‌ போராடிவரும் நாடுகள் தங்‌கள் முயற்சியை ‌ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் பயங்கர வாதத்தை வேரறுக்க ஆசியான் அமை‌ப்பு மேற்கொள்ளும்‌ முயற்சிகளுக்கு இந்தியா துணைநிற்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.‌ நேற்று மோடி ஆற்றிய உரையில் இந்தியாவை உலகதரத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று கூறியிருந்தார்.

முன்னதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ ஆபே உள்ளிட்ட பல்வேறுநாட்டு தலைவர்களை மோடி இன்று சந்தித்து பேசினார். இந்தமாநாட்டில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், கனடா அதிபர் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

Leave a Reply