பரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை, கடந்த நான்கரை ஆண்டு, பா.ஜ., ஆட்சியில், ஊழல் இன்றி, மக்களின்வளர்ச்சிக்கு பலதிட்டங்கள் நிறைவேற்ற பட்டுள்ளன. இளம் தலைமுறையினர், பரம்பரை ஆட்சியை விரும்ப வில்லை; நாட்டின் வளர்ச்சியைத்தான் விரும்புகின்றனர். பா.ஜ., அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, மக்களிடமும், இளைஞர்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டும். நாம், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம். சிலர், குடும்பத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுகின்றனர்.

பா.ஜ., பெற்ற வெற்றி, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பூத்கமிட்டியினரின் கடும் முயற்சியால் கிடைத்தது. நீங்கள் கடுமையாக முயற்சித்தால், வெற்றி கிடைக்கும்.பா.ஜ.,வில் மட்டுமே சாமானியரும் உயர்பதவிக்கு வர முடியும். லோக்சபா தேர்தலில், நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம். மத்திய அரசு, பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே, தொழில் தொடங்கவும், வர்த்தகம் புரியவும் உதவி செய்கிறது எனும் தவறான கருத்து நிலவுகிறது; உண்மை அதுவல்ல.

சிறு,குறு நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்கி, வளர்ச்சியை எட்டவும், மத்திய அரசு உதவி புரிகிறது. காங்., வீடுகட்டி கொடுப்பதை விளம்பரத் திற்காக செய்தது; பா.ஜ., ஏழைகளை மையப்படுத்தி, கட்டிதருகிறது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்., 25 லட்சம் வீடுகளை கட்டிகொடுத்தது. பா.ஜ.,வின் நான்கு ஆண்டு ஆட்சியில், 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டன. தமிழகத்தில், 4.30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. இத்திட்டங் களை, வீடுதோறும் கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply