பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்ந்து பாகிஸ் தானிடமே இருக்கும் என்று கூறிதற்காக பரூக் அப்துல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக. கோரியுள்ளது.  

 ஜம்முவில் நேற்று செய்தியாளர் களிடம் பேசிய பரூக் அப்துல்லா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்ந்து பாகிஸ் தானிடமே இருக்கும், அதே போல் ஜம்முகாஷ்மீர் தொடர்ந்து இந்தியா வசமே இருக்கும். இதை நாம்முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் பல ஆண்டுகளாக கூறிவருகிறேன். ஆனால், என்ன செய்தார்கள்? ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருபகுதியாக சேர்த்தார்களா? போரினால் அப்பாவி மக்கள்தான் பலியாவர்கள். பேச்சுவார்த்தைதான் தீர்வு” என்று தெரிவித்தார்.

பரூக் அப்துல்லாவின் கருத்திற்கு பாஜக. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ப.ஜ.க,. செய்தி தொடர்பாளர் வீரேந்திர குப்தா “ ஒன்று பரூக் அப்துல்லா மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்தபிரச்சனையை கிளப்பியிருக்க வேண்டும்.

பரூக் அப்துல்லாவின் கருத்து இந்தியாவிற்கு எதிரானது மட்டுமல்ல, காஷ்மீர் விவாகரத்தில் இந்தியாவின் நிலை பாட்டை வலுவிலக்க செய்யும்வகையில் உள்ளது. எனவே அவர் மன்னிப்பு கேட்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply