நாட்டில் உள்ள பல இக்கட்டான சிக்கல்களை மோடி அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது மோடி அரசு தொழிற்சாலை மற்றும் விவசாயம் ஆகிய இரண்டையும் சேர்த்தவளர்த்து வருகிறது. கிராமப்புறங்களை பெரியநகரங்களுடன் கைகோர்த்து செல்லவும் வளர்ச்சி என்பதை ஒவ்வொருவர் கைகளிலும் சென்று சேரவும் வழிவகுக்கிறது என்று கூறினார்.

மேலும் எதிர்க்கட்சியினர் வேலைவாய்ப்பு இல்லாத ஒருவளர்ச்சி என்று விமர்சித்தது.  முத்ராவங்கி திட்டத்தின் மூலம் 7.28 கோடி மக்களுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்பதை நினைவுகூறுகிறேன்.

 

அதேசமயத்தில் நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் அவர் கூறினார். தற்போது உலகரங்கில் இந்தியா கவனிக்கதக்க ஒரு நாடாக மாறியிருக்கிறது என்றும் அமித் ஷா கூறினார். 

Leave a Reply