பள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியின் நிதி உதவி மூலம் மகராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஸ்டார்ஸ் (STARS) என்கிற புதியதிட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. காணொலி காட்சிமூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல்வேறு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், தீனதயாள் அந்த்யோத்யா யோஜனா-தேசிய ஊரகவாழ்வாதாரத் திட்டத்தின் (DAY-NRLM) கீழ் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஊரகவளர்ச்சி திட்டங்களை மேம்படுத்துவதற்கு ரூ.520 கோடி சிறப்பு நிதி தொகுப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் உலக வங்கியின் ஆதரவுடன் இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஸ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஸ்டார்ஸ் என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது.

இதனுடைய மொத்ததிட்ட செலவு ரூ.5,718 கோடி கணக்கிட பட்டுள்ளது. இதற்காக உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்கடாலர் பெறப்படுகிறது.
இந்ததிட்டத்தை தவிர தமிழ்நாடு, குஜராத், உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இது போன்ற ஏடிபி.நிதி உதவிமூலம் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் திட்டத்தையும் செயல் படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Comments are closed.