பழைய வாகனக்கழிவு கொள்கைக்கு அடுத்த 15 அல்லது ஒருமாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

டில்லியில் துவங்கிய ஆட்டோ எக்ஸ்போவை திறந்துவைத்த பின்னர் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி பேசியதாவது: பழைய வாகனக் கழிவு கொள்கை குறித்து சில அமைச்சரவைகள் சந்தேகங்களை கேட்டன. அது தற்போது தீர்க்கபட்டது. இதனால், அடுத்த 15 அல்லது ஒருமாதத்தில், இந்த கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு மானியம்வழங்குவது தொடர்பாக அமைச்சரவை முடிவு செய்யும்.

அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின்னர், பழைய வாகனங்களில் உள்ள காப்பர், அலுமினியம் மற்றும் உதிரிபாகங்களை மறு சுழற்சி செய்வது குறித்து கவனம் செலுத்தப்படும். இதன் மூலம் உற்பத்தியாளர்களின் செலவு குறைக்கப்படும். இந்த கொள்கையால், ஆட்டோ மொபைல் செக்டார் பலன்பெறும்.

இந்திய ஆட்டோமொபைல் துறை பிஎஸ் 6 தரத்திற்கு அரசு விதித்த காலக்கெடுவிற்குள் மாறியது. எதிர்கால போக்குவரத்தில் மின்சாரவாகனங்கள் முக்கிய இடத்தை வகிக்கும். அவற்றை தயாரித்து ஏற்றுமதிசெய்வதில் இந்தியா முதலிடத்தை பெறும்.

நாட்டில் புதிதாக 40 ஆயிரம் கி.மீ., நீளத்திற்கு புதியசாலை கட்டமைப்புகளை உருவாக்கவும், 23 எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டில்லி மும்பை இடையிலான எக்ஸ்பிரஸ்வே பணிகள் அடுத்த 3 ஆண்டிற்குள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.