குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறும் நிலையில், பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், குடியுரிமைச் சட்டமசோதா தங்க கடிதத்தில் பொறிக்கப்பட வேண்டியது என்றார். இந்த மசோதா மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அடைக்கலம்தேடி வந்த மக்களுக்கு நிம்மதி தரக்கூடியது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

குடியுரிமை மசோதாவின் பயன்பாடு குறித்து எம்.பிக்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத்திருத்தமசோதா குறித்து எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பேசிவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்தமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Comments are closed.