பிரதமர் மோடி சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் , கில்ஜித் பற்றி குறிப்பிட் டதுடன், பாகிஸ்தானின் எல்லைதாண்டிய பயங்கரவாத செயலுக்கு கடுமையாக எச்சரித்தார்.

மனித நேயம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும் போது, பெஷாவரில் பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்டபோது, இந்திய பார்லிமென்ட், இந்தியாவில் உள்ள பள்ளிக்குழந்தைகள் அனைவரும் கண்ணீர் வடித்தனர். இதுதான் இந்தியாவின் இயற்கைகுணம். ஆனால் மறுபுறம் பயங்கரவாதிகளை சுதந்திரபோராட்ட வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். பயங்கரவாதிகளை சித்தரிப்பவர்கள் எத்தகைய மக்கள்? மக்கள்கொல்லப்படும் போது, கொண்டாட்டங்கள் நடத்தும் மக்கள் எத்தகையவர்கள்? உலகம் அவர்களை கவனிக்கிறது.

கடந்த சிலநாட்களாக எனக்கு நன்றி தெரிவித்த பலுசிஸ்தான், கில்ஜித், மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். பலுசிஸ்தான் மக்கள் இந்தியாவுக்கு நன்றிதெரிவிக்கும் போது, 125 கோடி இந்தியர்களை நினைத்து பார்க்கின்றனர் என கருதலாம். இளைஞர்கள் வன் முறையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணையவேண்டும். வன்முறை, பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத கொள்கைகளில் அவர்களால் எதுவும் சாதிக்கமுடியாது என்றார்.

Leave a Reply