பாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு, குஜராத் மாநிலத்தில் நடந்தவிழாவில், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனில் வசித்த, ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பெரும்பான்மை முஸ்லிம்களால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர். அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், அங்கிருந்து வெளியேறி, நம்நாட்டில் தஞ்சமடைந்தனர்.

நீண்ட காலமாக, நம் நாட்டில் வசிக்கும் இவர்கள், இந்திய குடியுரிமைகோரி விண்ணப்பித்தனர். கடந்த, 2016ல், இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறையில், மத்தியஅரசு மாற்றம் செய்தது. இதையடுத்து, அரசி தழில் குறிப்பாணை வெளியிடப்பட்டது. இதன்படி, குஜராத்தின் ஆமதாபாத், காந்திநகர் மற்றும் கட்ச் மாவட்ட கலெக்டர் களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனை சேர்ந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கிய சிறுபான்மை யினருக்கு, குடியுரிமை சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வழங்கப் பட்டது.இதையடுத்து, ஆமதாபாதில் நேற்று நடந்தவிழாவில், 90 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப் பட்டது.இந்திய குடியுரிமைபெற்ற இவர்கள், ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பயன்களை பெறலாம். வாக்காளர் பட்டியலில் தங்கள்பெயர்களை பதிவு செய்யலாம்.

Leave a Reply