பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருஅங்கம்தான் தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், காஷ்மீர் பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு நிரந்தர மற்றும் அமைதித்தீர்வு காண மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதேசமயம், ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் நம்பிக்கையையும் பெறவேண்டும்.

காஷ்மீரில் நடைபெறும் சம்பவங்களால் ஒவ்வோர் இந்தியரையும்போல நானும் மிகவும் வேதனையடைந்துள்ளேன். இந்தவிவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரேகுரலில் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலைக்கு, பாகிஸ்தானால் ஆதரவு அளிக்கப்படும் எல்லைதாண்டிய பயங்கரவாதம் தான் காரணமாகும். ஜம்முகாஷ்மீரை சேர்ந்த பல்வேறு மதத்தினரும், நாடுமுழுவதும் வசித்துவருகின்றனர். அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அணுகி, தாங்கள் தற்போதுவசிக்கும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் உறவினர்களிடம் தெரிவிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஜம்முகாஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு, அரசமைப்பு சட்ட கோட்பாடுகளுக்கு உள்பட்டு நிரந்தர, அமைதித்தீர்வை காண்பதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு அனைத்துதரப்பினரின் துயரங்களுக்கும் தீர்வுகாண்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பலூசிஸ்தானிலும் பாகிஸ்தான் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டுள்ளது. அப்பகுதிகளில் நிகழ்த்திவரும் அட்டூழியங்களுக்காக சர்வதேச சமூகத்திடம் பாகிஸ்தான் பதில் அளிக்கவேண்டும் .

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Leave a Reply