மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி மற்றும் பாஜக தொண்டர்களிடையே சமீபகாலமாக நடந்த அரசியல் மோதல்களில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இறந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தி யடையவும் அவர்கள் மறுமையில் நற்பேற்றினை பெறவும் தர்ப்பணம் கொடுக்கும் மகாளய அமாவசை தினமான நேற்று மேற்கு வங்காளம் மாநிலத்தில் அரசியல் மோதல்களில் கொல்லப்பட்ட 80 பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டு தர்ப்பணம் தந்தார்.

 

கொல்கத்தா நகரில் உள்ள பாக் பஜார் காட் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் பாஜக தேசியபொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா மேற்குவங்காளம் மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

தர்ப்பணம் முடிந்த பின்னர் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின் குடும்பத்தாரை ஜே.பி.நட்டா தனித்தனியாக சந்தித்து ஆறுதல்கூறினார்.

Comments are closed.