பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். தாமரை வெல்லட்டும், தமிழகம் வளரட்டும் என்ற பெயரில் பாஜக தேர்தல்அறிக்கை வெளியீட்டுள்ளது. பாஜக ஆட்சிக்குவந்தால் மீண்டும் மதுவிலக்கு; மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 விலை நிர்ணயிக்கப்படும்  என்று குறிப்பிடப் பட்டுள்ளது.  கரும்பு டன்னுக்கு ரூ. 4,500; நெல்லுக்கு ரூ. 2,500 என விலை நிர்ணயம் செய்யப்படும் மின்மிகை மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்; லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ க்கு நிகராக அரசு பள்ளிகளில் கல்வி முறை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பல்கலைக் கழகம் அருந்ததியர் நலவாரியம் அமைக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடிப்பு ஊக்குவிக்கப்படும்; மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.5000 ஊக்குத்தொகை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் கட்டண தரிசனம் ஒலிக்கப்படும்; ஆக்கிரமிப்பு கோயில் சொத்துகள் மீட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் விவரம் :

* தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கு

* ஊழலற்ற நிர்வாகம்

* விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டியை மாநில அரசு செலுத்தும்

* தமிழகத்தில் உதய் திட்டம் கொண்டு வரப்படும்.

* ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை

* ஆன்மிக சுற்றுலா திட்டம்

* வீட்டிற்கு நாள்தோறும் 20 லிட்டர் குடிநீர்

* தமிழ் ஆங்கிலம் தவிர ஏனைய மொழி கற்று தரப்படும்

* அரசே மணல் விநியோகம் செய்யும்

* பெண் கல்வி ஊக்குவிக்க 12 ம் வகுப்பு வரை ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை

* 6 ம் வகுப்பு முதல் யோகா , தியான பயிற்சி

* கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்

* பசு இனம் காத்திட நடவடிக்கை

* ஸ்மார்ட் ரேசன் கார்டு்

* மணல் கொள்ளை தடுக்க கடும் சட்டம்

* சூரிய ஒளி மின்சாரத்திற்கு 50 சதவீத மானியம்

இவ்வாறு பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.

தேர்தல் அறிக்கை PDF
 

Tags:

Leave a Reply