பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்மாதம் துவங்கி 7 கட்டங்களாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல்கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்டபணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, பாஜகவின் ஆட்சிகுறித்து யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

பாஜகவின் 2 ஆண்டுகால ஆட்சியில் எவ்வித கலவரங்களும் ஏற்பட வில்லை. இந்த ஆட்சியில் குற்றங்களும் குற்றவாளிகளும் குறைக்கப் பட்டுள்ளன. உத்தரபிரதேசம் பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளது. மேலும் 63 ஆண்டுகளுக்கு பின்னர் உத்தரபிரதேச உதயதினம் கடந்த 2018ம் ஆண்டு பாஜக ஆட்சியில் மிகசிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply