மஹாராஷ்டிர காங்கிரஸ் எதிர்கட்சித்தலைவர் ராதாகிருஷ்ண விகே பாடீல் மகன் சுஜய் விகே பாடீல், பாஜக-வில் தன்னை செவ்வாய் கிழமை இணைத்துக் கொண்டார். மஹாராஷ்டிர மாநில பாஜக தலைவரும், அம்மாநில முதல்வருமான தேவேந்திர ஃபட்னவிஸ் முன்னிலையில் இணைந்தார்.

இது குறித்து சுஜக் கூறுகையில், நான் எனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராக முடிவெடுத்துள்ளேன். எனவே இந்தமுடிவை என்னுடைய பெற்றோர் ஆதரப்பார்களா என்று தெரியவில்லை. இருப்பினும், என்னுடைய பெற்றோர் பெருமைப்படும் அளவுக்கு பாஜக வழிகாட்டுதலின்படி நான்செயல்படுவேன். பாஜக எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சியினர் எனக்கு மிகுந்த ஆதரவாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அனுபம் ஹஸாரே தன்னை பாஜக-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-வும் அவருடன் காகேன் முர்மூவும் பாஜகவில் இணைந்தார். தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இவர்கள் இருவரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

Leave a Reply