மகாராஷ்டிராத்தில் சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில்கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சிவசேனாவுடன் விரைவில் கூட்டணி ஆட்சிஅமையும் என அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

இந்தநிலையில் சிவசேனா தனது பிடிவாதத்தில் இருந்து பின் வாங்கி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய்ராவத் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் நீடிப்பது அவசியமானது. ஆனால் எங்களுக்கான மரியாதை முக்கியம். தனிப் பட்ட நபர்கள் முக்கியம் அல்ல. மாநிலநலனே முக்கியம். இதனை மனதில்கொண்டு, அமைதியான முறையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது. ஆட்சி அமைப்பதில் தாமதம் செய்துவருவதால், சிவசேனா எம்எல்ஏ.க்கள் கட்சியைவிட்டு விலகிசென்று விடுவார்கள் என்று கூறப்படுவது தவறு.

என்று அவர் பேசினார். இதையடுத்து நிருபர்களிடம்  சிவசேனாவை சேர்ந்த  சஞ்சய் ராவத் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஆட்சியில் சமபங்கு கேட்பதில் சிவசேனா பிடிவாதபோக்கு காட்டுகிறதா?

பதில்:- நீங்கள்தான் அப்படி கூறுகிறீர்கள். ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டதை செயல்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

கேள்வி:- சட்ட சபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டு உள்ளாரே?.

பதில்:- அவரை வாழ்த்துவது கடமை. 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்றவர் முதல்மந்திரியாக பதவி ஏற்பார்.

கேள்வி:- சிவசேனாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி மற்றும் 13 மந்திரி பதவிகள் வழங்க பா.ஜனதா முன் வந்து இருப்பதாக கூறப்படுகிறதே?.

பதில்:- கணக்கு புத்தகத்துடன் நாங்கள் அமர்ந்து இருக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.