லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி மற்றும் வருண்காந்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் பாஜக நாடுமுழுக்க போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக இந்தபட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டார்கள்.

இந்த நிலையில் உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் பக்கம் பாஜக தனது கவனத்தை திருப்பி இருக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் பாஜக தனியாகநிற்கிறது. இதில் உத்தர பிரதேசத்தில் பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதுவரை எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்படிக்கை ஏற்படவில்லை.

தற்போது இரண்டு மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது.  உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் மேற்குவங்கத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இதில் மேனகாகாந்தி மற்றும் வருண் காந்திக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக. வாய்ப்பு வழங்கி உள்ளது. உத்தர பிரதேசத்தின் சுல்தான் பூரில் மேனகா காந்தி போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அதேபோல் பலிபிட்டில் வருண்காந்தி பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். சுல்தான் பூரில் மேனகா காந்தி போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு பெரியபின்னடைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply