: பாஜகவும் சிவசேனாவும் மாறிமாறி சண்டை போட்டால் அது இரண்டுகட்சிக்கும் பெரிய பிரச்சனையாக முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சிஅமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நேற்று எந்தகட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வென்றுள்ளது. ஆனால் நான்கு கட்சிகளுக்குள் கூட்டணி உடன்படிக்கை இன்னும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் சிவசேனா மற்றும் பாஜகவின் பிளவை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.இதனால் அமைச்சர் நிதின்கட்கரி போன்ற முன்னணி தலைவர்கள் சிவசேனாவுடன்  சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. கடைசிவரை சிவசேனா மற்றும் பாஜக இடையே சமாதானம் ஏற்படவில்லை.

இது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், சுயநலம் மிகமோசமான விஷயம். அரசியலில் சுயநலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அரசியல்வாதிகள் மக்கள் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சுயநலம் தவறு என்று தெரிந்தும் சிலர் அதைவிடாமல் பிடித்து வைத்து இருப்பார்கள். அவர்கள் இப்படி சண்டை போட்டுகொண்டு இருக்ககூடாது. பாஜக மற்றும் சிவசேனா இப்படியே ஒருவிஷயத்திற்காக சண்டை போட்டால் அது இரண்டு பேருக்கும் பெரிய பிரச்சனையாக முடியும், என்று கூறியுள்ளார்.

Comments are closed.