பாஜக., தேசிய செயற்குழு கூட்டம் கடந்தவாரம் நடப்பதாக இருந்தது. அப்போது உடல்நலம் பாதிப்படைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல்பிகாரி வாஜ்பாய் மரணம் அடைந்தார். இதனால், பாஜ செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பாஜக செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8, 9-ந்தேதிகளில் 2 நாட்கள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply