சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அலுவலகம், சென்னை தியாகராய நகரில் உள்ள  மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திறக்கப்பட்டது.

இதற்காக அதிகாலை 4 மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகியவை நடத்தப்பட உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியசெயலாளர் எச்.ராஜா, பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு, துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

தேர்தல் பணிகளுக்காக கமலால யத்துக்கு அருகில் தனியாக ஒருவீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், ஆனால், திறப்புவிழா நிகழச்சிகளும் ஹோமங்களும் மட்டும் அதிகாலை 4 மணி முதல் கமலாலயத்தில் நடைபெறும் என்றும் பாஜக அலுவலகச் செயலாளர் சர்வோத்தமன்,‘ தெரிவித்தார்.

Leave a Reply