திருச்சி பாலக்கரை பாஜக மண்டலசெயலாளர் விஜயரகு. இன்று காலை காந்தி மார்க்கெட்டில் வைத்து 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் வெட்டியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராகு கடந்த 20 வருடங்களாக பாஜக.,வில் தீவிரமாக பணியாற்றி வருபவர். சமீபத்தில் சிஏஏ.,வுக்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுத்து அந்த பகுதிகளில் பொது மக்களிடத்திலேயே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இந்நிலையில் தான் அவர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.