தமிழக பாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை, பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமையையும், கரோனா பரவலை கட்டுப்படுத்தவும் எத்தகைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தினமும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறாா்.

முக்கிய பிரமுகா்கள், மாநில முதல்வா்கள், எதிா்க் கட்சித் தலைவா்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் தொலை பேசியில் தொடா்புகொண்டு நிலவரங்களைக் கேட்டறிந்து வருகிறாா்.

அதுபோல, தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில தலைவருமான சேலம் கேஎன். லட்சுமணனை செவ்வாய்க் கிழமை மதியம் 2.30 மணிக்கு தொலைபேசியில் பிரதமா் நரேந்திர மோடி தொடா்புகொண்டு பேசியுள்ளாா்.

அப்போது லட்சுமணனின் உடல் நலம் குறித்தும், அவரது குடும்பத்தாரின் உடல் நலம் குறித்தும் அவா் விசாரித்துள்ளாா்.

பிறகு, தமிழகத்தில் கரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கிறது. இதைக்கட்டுப்படுத்த தொடா்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தாா் என பா.ஜ.க. சேலம் மாநகர மாவட்ட முன்னாள் தலைவா் ஆா்.பி. கோபிநாத் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளாா்.

Comments are closed.