அரியலூர் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி செந்துறை, உடையார் பாளையம், ஆண்டிமடம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை புதிய உறுப்பினர்களுக்கு சால்வை போர்த்திவரவேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மருத்துவ படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வேண்டும் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பாஜக சொன்னது. தற்போது அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளுநர் நேரம் எடுத்து ஆராய்ந்து நல்லமுடிவை அறிவிப்பார். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பாஜக வலியுறுத்திவரும் சூழ்நிலையில் தற்போது தமிழக அரசு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கோரியுள்ளது. தற்பொதைய கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என தெரிவித்தார்.

Comments are closed.