வாஜ்பாய் பாஜக வளர காரணமாக இருந்தவர். அவரும் அத்வானியும் எப்படி பாஜகவுக்கு அப்படித்தான் இன்றைய மோடி மற்றும் அமித் ஷாவும்.

கவிஞர்.. சிறந்த பேச்சாளர். பண்பாளர். எதிரிகளையும், துரோகிகளையும் சமமாக பாவித்தவர். காங்கிரஸின் வாரிசை காப்பாற்றியபெருமை இவருக்கு உண்டு. ஆனால், அரசியலில் அதிகம் நல்லவராய் இருந்தால் ஆபத்து என்பதை 2004ல் தோற்றபின்பு உணர்ந்தவர். அரசியலில் பலபேர் சேர்ந்து சக்கிர வ்யூகம் அமைத்து தோற்கடிக்கப்பட்ட அரசியல் அபிமன்யு.

மேலும்… வாஜ்பாய் தனது நண்பர் அத்வானியோடு சேர்ந்து பாஜகவை வளர்த்தார். இன்று இறந்தும் பாஜக.,விற்கு நல்லது செய்திருக்கிறார். அடுத்தவருட தேர்தலில் மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசத்தில் பாஜகவிற்கு கிடைக்காது என்று பலர் கனவு கண்டு கொணடிருக்கும் பாராளுமன்ற இடங்களை தந்து விட்டு சென்று விட்டார்.

நடுநிலைவாதியாக இவர் 2002ல் பேசிய பேச்சுகளை எதிர்கட்சிகள் உபயோகப்படுத்தி கொண்டன. ஆனால், அவருக்கு தரவேண்டிய மரியாதை தரவில்லை. பாரத்ரத்னா பட்டம் வழங்கப்பட்ட போதுகூட இன்று அவர் புகழ்பாடும் பல எதிர் கட்சிகள் அதை சில பல சமூக ஆர்வலர்களின் தோள்களிலிருந்து எதிர்த்தனர் என்பதே உண்மை.

வாஜ்பாய் ஒரு சகாப்தம். அவர் 2004ல் பலரால் தோற்றிருக்கலாம். தோற்கடிக்கபட்டிருக்கலாம். ஆனால், இந்தியா முன்னேற்ற பாதையில் மீண்டெடுத்தவர்.

இவரின் சாதனைகள் சில…

— போக்ரான் அணுகுண்டு சோதனை, அதனால் அமெரிக்கா கொடுத்த அழுத்தங்களை தாங்கும் அளவிற்கு இந்தியாவை வளர்ச்சி அடைய வைத்தது
— கார்கில் சண்டையில் பாகிஸ்தானின் துரோகத்தையும் எதிர்த்து வெற்றி பெற்றது
— டாலர் விலையை கட்டுபாட்டில் வைத்திருந்தது,
— தங்கம் விலை அதிகம் ஏறாமல் பார்த்து கொண்டது,
— இன்றைய ஆதாரின் தொடக்கமே இவரின் அனைவருக்கும் அடையாள அட்டை எண்ணுடன் தரவேண்டும் என்ற யோசனையே.
— தங்க நாற்புற வழி சாலை
— கைப்பேசி நுண்ணலை இவரின் ஆட்சியில்தான் புரட்சிகள் செய்தது.

அவரிடம் பதவிகளை பெற்று கொண்டு பின்னால் துரோகம் இழைத்தவர்கள் பலர்.

குறிப்பாக தென்னகத்திலிருந்து தெலுகுதேசம், அதிமுக மற்றும் திமுக. ஆனால் 2019ல் பாஜக வென்றிட அவரின் நினைவுகள் மிகவும் உதவும்…

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்…
இறந்தாலும் ஆயிரம் பொன்…

வாஜ்பாய் பாஜகவிற்கு அப்படித்தான்…

Leave a Reply