நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் பாஜக. அதிக இடங்களில் வெற்றி பெற்றதை யடுத்து பா.ஜ.க. பாராளுமன்றகுழு கூட்டம் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பாஜக தொண்டர்களின் அயராத உழைப்பால் தான் இந்தவெற்றி சாத்தியமானது.

மக்களை அச்சுறுத்துவதும், குழப்புவதும் இடதுசாரிகளின் கைவந்தகலை. பாஜக தொண்டர்களின் அயராத உழைப்பால்தான் இந்தவெற்றி சாத்தியமானது.

தேர்தல்களில் கிடைத்தவெற்றியை, தன்னுயிரை கொடுத்து உழைத்த பாஜக தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறோம். திரிபுராவில் இடது சாரிகளின் தாக்குதலுக்கு பாஜக தொண்டர்கள் பலர் பலியாகிஉள்ளனர். மக்களை அச்சுறுத்துவதும், குழப்புவதும் இடதுசாரிகளின் கைவந்தகலை.. பாஜக வெற்றியை குறைத்து மதிப்பிட சிலர் நினைக்கிறார்கள், எல்லா வண்ணங்களும் காவியாக மாறிவிட்டது என்பதே உண்மை. 

சூரியன் மறையும் போது சிகப்பு வண்ணத்தில் இருக்கும், ஆனால் அது உதிக்கும்போது காவி நிறத்தில்தான் இருக்கும். ஒருஇடத்திலும் வெற்றி பெறாத மாநிலத்தில் பூஜ்யத்தில் இருந்து சிகரத்தை தொட்டுள்ளோம் என்பதை தேர்தல் ஆய்வாளர்கள் எண்ணி பார்க்கவேண்டும்.

தேர்தல்களில் கிடைத்தவெற்றியை, தன்னுயிரை கொடுத்து உழைத்த பாஜக தொண்டர்களுக்கு காணிக்கை யாக்குகிறோம்

பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு பிரபலங்கள் தேவையில்லை, இளைஞர்கள் போதும்.

Leave a Reply