வரலாற்று சிறப்புமிக்க பாட்னா பல்கலைக் கழகக்தில் பயின்ற யஷ்வந்த்சின்ஹா, ரவி சங்கர் பிரசாத், ஜே.பி. நட்டா, சத்ருஹன் சின்ஹா, ராம் விலாஸ் பஸ்வான், லல்லுபிரசாத் யாதவ், நிதிஷ் குமார் உள்ளிட்டோர் அரசியல் துறையில் பிரமுகர்களாக இருந்து வருகின்றனர்.

இதுதவிர பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர் களையும் உருவாக்கிய பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டுவிழா நாளை நடைபெறுகிறது.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி நாளை டெல்லியில் இருந்து பீகார் வருகிறார். இதுதவிர, அம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட ங்களையும் அவர் தொடங்கிவைக்கிறார்.

பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பாஜக.வால் மீண்டும் முதல் மந்திரியாக பொறுப்பேற்றிருக்கும் நிதிஷ் குமார், நிதிஷ்குமாருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்ட முன்னாள் முதல் மந்திரி லல்லுபிரசாத் யாதவ், பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கையை வன்மையாக விமர்சித்து வரும் மத்திய முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் பலமுக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply