ஏமன் நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளபாதிரியாரை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களவையில் தெரிவித்தார். ஏமன் நாட்டின் ஏடன்நகரில் அன்னைதெரசா மிஷினரி சார்பில் இயங்கும் முதியோர் இல்லத்தில் கடந்த மார்ச்மாதம் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 முதியோர் கொல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்த கேரளபாதிரியார் டாம் உழுனானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இதுவரை அவர் மீட்கப்படவில்லை.

இந்தநிலையில் மக்களவையில் நேற்று கேரள எம்பிக்கள் இதுகுறித்து பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘‘ஏமனில் கடத்தப்பட்ட கேரளபாதிரியார் டாம் உழுனானிலை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அங்கு இந்திய தூதரகம் இல்லாததால் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்கள் மூலம் ஏமனை தொடர்புக்கொண்டு பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறார். பாதிரியாரை நிச்சயம் மீட்போம்’’ என்றார்.

Leave a Reply