தனக்கு அடி விழுந்தவுடன் கேரள கம்யூனிஸ்ட் அரசு இஸ்லாமிய பயங்கரவாதிகள் 700 பேரை அதிரடியாக கைது செய்திருக்கிறது.

கேரள மாநிலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிர்வாகிகளை படுகொலை செய்த போது கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்த கையாலாகாத கம்யூனிஸ்ட் அரசு…

கேரள மாநில கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பின் நிர்வாகி அபிமன்யு இஸ்லாமிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா CFI இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளால் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பானது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா PFI அமைப்பின் மாணவர் பிரிவாகவும் சோஷியல் டெமாக்ரடிக் இந்தியா அமைப்பு SDPI பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா PFI அமைப்பின் அரசியல் பிரிவாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் நாடு முழுவதும் பரவி இருந்தாலும் குறிப்பாக தென்பாரதத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவோடும் கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆதரவோடும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிர்வாகிகளை தொடர்ச்சியாக படுகொலை செய்து வந்தனர்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் ரீதியாக பாஜகவை வீழ்த்த முடியாத காரணத்தால் PFI, CFI, SDPI உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் அவர்களுக்கு ஆதரவளித்து சங்கபரிவார் இயக்கங்களை சேர்ந்த துடிப்பான இளம் நிர்வாகிகளை படுகொலை செய்து வந்தனர்.

தொடர்ச்சியாக படுகொலைகள் நடைபெற்று வந்த போதெல்லாம் படுகொலைகளை செய்து வருபவர்கள் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா , கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா, சோஷியல் டெமாக்டரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்புகள் தான் என ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸீம் கேரளாவில் கம்யூனிஸ்ட்களும் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

இந்நிலையில் கடந்த மாதம் கேரளாவில் எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான ஸ்டூடன்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா SFI அமைப்பின் நிர்வாகியான மாணவர் அபிமன்யூ கல்லூரி வளாகத்திலேயே கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா CFI அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு மேலும் நாம் வேடிக்கை பார்த்தால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக இவர்கள் படுகொலை செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து கேரள கம்யூனிஸ்ட் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி மாநிலம் முழுவதும் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் சோதனையிட்ட போது டன் கணக்கில் ஆயுதங்களை கைப்பற்றி அதிர்ந்து போனது.

பயங்கரவாத இயக்கங்களின் அபார வளர்ச்சியைக் கண்டு மிரண்டு போன கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசும் காவல் துறையும் இதுவரையிலும் மேற்கண்ட அயமப்புகளைச் சேர்ந்த 700 பேரை கைது செய்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் எச்சரித்த போதே கேரள மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் பல உயிர்கள் பலியானதை தடுத்திருக்கலாம்! என்ன செய்வது சங்பரிவார் அமைப்புகளை அழிப்பதற்காக அவர்கள் ஊக்குவித்து ஊட்டி வளர்த்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் கம்யூனிஸ்ட்கள் மீதே கைவைத்த பிறகு தான் அவர்களுக்கு புத்தி வந்திருக்கிறது.

பாம்புக்கு பால் வார்ப்பதை விட ஆபத்தானது பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது என்பதை கம்யூனிஸ்ட்கள் இப்போது உணரத்தொடங்கி இருக்கிறார்கள்.

மதச்சார்பின்மை பேசி ஓட்டுவங்கி அரசியலுக்காக பயங்கரவாதத்தையும் இன்றுவரை ஆதரித்து வருகிற அரசியல் கட்சிகளும் எதிர்காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் போது தான் இந்து இயக்கங்கள் இதுநாள் வரையிலும் எச்சரித்து வந்ததை எண்ணி உணர்வார்கள் என்பது நிதர்சனம்!!

ஜார்கண்ட் மாநில பாஜக அரசு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு அம்மாநிலத்தில் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply