பிரதமர் மோடியின் புதியதிட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என்று சாலைபோக்குவரத்து, நெடுஞ் சாலைகள் துறை மத்திய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவ்யா கூறினார்.


தமிழ்நாடு பாஜக சார்பில், பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வை மற்றும் திட்டம்குறித்த விளக்கக்கூட்டம் சென்னை, செளகார் பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் மான்சுக் எல். மாண்டவியா பேசியதாவது:


பல மொழிகள், பல மதங்கள் என வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா என்ற ஒருகுடையின் கீழ் உள்ள ஒற்றுமைமிக்க நாடு. நம்நாட்டின் கட்டமைப்பு நல்ல நிலையில் இருந்தால்தான் நம்முடைய நாடுவளர்ச்சி அடையும். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்திட்டத்தில், ஜிஎஸ்டி உள்ளிட்ட பலசலுகைகள் இன்னும் 10 ஆண்டுகளில் நம்முடைய சந்ததியினருக்கு ஏற்றதாக இருக்கும். பிரதமர் மோடியின் புதியதிட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். 


இந்தியாவில் சாலைவசதி, தேசிய நெடுஞ்சாலைகள் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுதிட்டத்தின் மூலம் 50 கோடி பேர் பயனடையவர். ஜி.எஸ்.டி.,யை கொண்டு வந்ததிலிருந்து இதுவரை 3 கோடிபேர் பதிவு செய்துள்ளனர். பாரதிய ஜனதா ஆட்சியில் ஒரு அமைச்சர் மீதுகூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை.


ஒசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply