பாரதிராஜா, சீமான், திருமுருகன் காந்தி, ஞாநி போன்றவர்களுக்கு ஹெச்.ராஜாவின் சமீபத்திய பேச்சைக் குறித்து விமர்சிக்கவோ, கண்டனம் செய்யவோ எந்தத் தகுதியும் தார்மீக உரிமையும் கிடையாது. பெண்களை இழிவுபடுத்தும் பாலியல் வக்கிரம் தோய்ந்த அருவருப்பு பேச்சுக்களில் சளைக்காமல் தொடர்ந்து ஈடுபடும் திராவிட அரசியல் கட்சிகளின் கயவர்களுக்கு அடிவருடிகளாகவும் கூஜா தூக்கிகளாகவும் துதிபாடிகளாகவும் செயல்படுபவர்கள் இவர்கள். இந்திய தேசிய எதிர்ப்பு, இந்துமத வெறுப்பு, சாதிய காழ்ப்புணர்வு ஆகியவற்றையே தங்கள் கொள்கைகளாகக் கொண்டு உழலும் மலப்புழுக்கள்.

அரசியலிலும் பொதுவாழ்விலும் பண்பையும் கண்ணியத்தையும் கடைப்பிடிப்பவர்களுக்கும், அல்லது குறைந்தபட்சமாக இந்த பிரசினையிலாவது வைரமுத்துவின் அவதூறுப் பேச்சைக் கண்டித்தவர்களுக்கும் மட்டுமே, தேசபக்தரும் பண்பாளருமான ஹெச்.ராஜா இந்த விஷயத்தில் ஆத்திரப்பட்டு கண்ணியம் தவறி பேசிவிட்டார் என்று விமர்சிப்பதற்கான தகுதியும் உரிமையும் உள்ளது. மேற்சொன்னவர்களுக்கு அல்ல.

நிற்க. பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்த்தேன்.

// வைரமுத்து என்பவன் தனிமனிதல்ல, தமிழினத்தின் பெரு அடையாளம் //

சில்லறைக் கவிதைகளை எழுதிய சினிமாப் பாட்டுக்காரர் வைரமுத்து பாரதிராஜாவைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் அடையாளமாக இருக்கலாம். ஆனால் மானமுள்ள தமிழர்களுக்கு அல்ல. தமிழின், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் என்றென்றும் நாயன்மார்களும், ஆழ்வார்களும், திருவள்ளுவரும், இளங்கோவும், கம்பரும் வானுயர்ந்து நிற்கும் எம் திருக்கோயில் கோபுரங்களும் மட்டுமே. ஆழ்வார்களின் சூடாமணியாக விளங்கும் ஆண்டாளை ஒரு அற்ப வணிகக் கவிஞர் அவதூறு செய்ததா, அல்லது அதற்குப் பதிலடியாக அந்தப் பலான வணிகக் கவிஞரை ஒரு அரசியல்வாதி கொஞ்சம் அத்துமீறிப் பேசியதா? எது ஒரு உண்மையான தமிழனுக்குப் பெரிய அவமானம்?

// திருப்பாவையை கருவறையிலிருந்து தெருவுக்குக் கொண்டுவந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா? //

தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் வாசிக்கப்படும் தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் திருப்பாவை, திருவெம்பாவை உரையுடன் வருகிறது. குக்கிராமங்களில் உள்ள கோயில்களில் கூட இப்பாடல்கள் பாடப் படுகின்றன. பல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் மார்கழி மாதம் காலையில் இசையும் பாட்டும் நடனமும் உரையுமாக பாவைப்பாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மை இப்படியிருக்கையில், வைரமுத்து பேசுவதற்கு முன்பு சாதாரண மக்களுக்குத் திருப்பாவை என்றால் என்னவென்றே தெரியாது என்பது மகா பொய் மட்டுமல்ல, மரண காமெடி.

// உன்னை போன்ற மனிதர்களால் தான் இந்தியா துண்டாடப்பட போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது //

அடடே, உங்களுக்கு அச்சம் எல்லாம் வருமா? அதுவும் இந்த விஷயத்துக்கா? அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்பாடலின் படி இதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்களோ? அப்ப சரிதான் 🙂

// ஏ ராசாவே, உன்னால் தமிழினத்திற்கு வைரமுத்து போல இலக்கியம் படைக்க முடியுமா? //

வைரமுத்து படைத்த "இலக்கியத்தின்" தரத்தைப் பற்றிய விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். கம்பர் கம்பர் என்று ஒருவரை தமிழ்நாட்டில் கவிச்சக்கரவர்த்தி என்று பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடி வருகிறார்களே, அவரைப் பற்றித் தெரியுமா?

ஈவேரா என்ற நபருக்கு கம்பரைப் போல காப்பியம் படைக்கக் கூட அல்ல, ஒரு பாடலாவது எழுதத் தெரிந்திருந்ததா? எம் ஆலயங்களைச் செய்த அமர சிற்பிகளின் கலைத்திறன் கூட வேண்டாம், ஒரு உரலையாவது செய்யத் தெரிந்திருந்ததா? ஆனால், இந்தத் தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்களை எல்லாம் கொளுத்த வேண்டும், அழித்து ஒழிக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்து வந்தவர் அவர். அத்தகைய ஈவேராவைத் தந்தை பெரியார் என்று கொண்டாடும் ஏ பாரதிராஜாவே, ஹெச்.ராஜாவை நோக்கி விரல் நீட்ட உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

// நீ தமிழனாக இருந்தால் அப்படி பேசியிருக்க மாட்டாய். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ //

ஆமாமாம். இப்ப தமிழ்நாட்டில் தமிழன் என்று தன்னை சொல்லிக்கொள்பவன் எல்லாம், ஆதி காலத்திலிருந்து இங்கேயே உள்ள தமிழ்க் காட்டெருமை, தமிழ் உடும்பு, தமிழ் மான் ஆகிய மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்து வந்த ஆதித்தமிழ்க்குடிப் பரம்பரையிலயிருந்து அப்படியே நேரே வந்தவன் தானே? அதையெல்லாம் தான் நீங்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து விட்டீர்களே.

சார், இது நீங்க எடுக்கற படம் அல்ல, அறிக்கை தான். எனவே உங்களிடத்தில் இயல்பாகவே ஊறிப்போயுள்ள கீழ்த்தரமான பிராமண வெறுப்பை தாராளமாக நேரடியாகவே உமிழலாமே சார். பஞ்சப் பராரி என்பதெல்லாம் எதுக்கு? கூடவே ஆரிய, வந்தேறி எல்லாம் சேர்க்க மறந்து விட்டீர்கள் போல.

இந்த கழிசடை அறிக்கையைப் போய் ஏதோ வீராவேச பிரகடனம் போல எல்லா தமிழ் ஊடகங்களும் காண்பித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது.

நன்றி ஜட்டாயு பிளிறு

Leave a Reply