2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்அறிவித்தார் . ஔவையார் பாடலை உதாரணமாகக் கூறிய விவசாயத்துறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதா ராமன் தொடர்ச்சியாக, உள்கட்டமைப்பு, விவசாயத்துறை, எரிவாயுத்துறை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் .

அதன் தொடர்ச்சியாக, இணையச்சேவை தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், பாரத்நெட் திட்டத்துக்காக 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். அதன்மூலம், நாடுமுழுவதும் தனியார் பங்களிப்புடன் தகவல் பூங்காங்கள்(data center parks) அமைக்கப்படும். பாரத்நெட் மூலம் ஒருலட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படும்.


கிராம பஞ்சாயத்துக்கள் அளவிலுள்ள பொதுத் துறை அமைப்புகளுக்கு இணையதள வசதி அளிக்கப்படும். குவாண்டம் தொழில் நுடப்பத்துக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 8,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

Comments are closed.