இந்தியாவில் பாராளு மன்றத்துக்கும், அனைத்து மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பா.ஜனதா ஆதரிக்கிறது. நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சட்டஆணையம் ஆய்வு செய்துவருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளிடம் அறிக்கையையும் கேட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார். அமித்ஷா எழுதியுள்ள கடிதத்தில், பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து மட்டுமல்ல, இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கொள்கை முடிவு. ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். அதேபோல ஆண்டு முழுவதும் நாட்டின் ஏதாவது ஒருபகுதியில் தேர்தல் நடைபெற்று வருவதும் தவிர்க்கப்படும்.

இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்பது ஆதாரமற்ற வாதம். மாறாக இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும். இதுபற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்து அரசியலுக்காக கூறப்படுவதாகவே தெரிகிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply