பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பா.ஜனதா ஆதரவை தெரிவித்துள்ளது. எதிர்க் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் சட்டவரையறை இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தும் சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் அரசியல்சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரும் என தெலுங்கானா பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர்ராவ் கூறியுள்ளார். 

 

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் திட்டம். அதை நாங்கள் விட்டுவிட வில்லை. தொடர்ந்து வருகிறோம். இதற்காக அரசியல் சாசனத்தில் உரியதிருத்தம் செய்வதற்கான மசோதாவை, விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அல்லது சிறப்புகூட்டம் கூட்டியும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply