அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற  தேர்தலில் திரையுலகம், விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுகாதாரம் ஆகிய துறைகளைச்சேர்ந்த 70 பிரபலங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்கு பாஜக. திட்டமிட்டு ள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: திரைப்படத்துறை, விளையாட்டுத் துறை,கலை மற்றும் பண்பாட்டுத் துறை, ஊடகத் துறை, சுகாதாரத் துறை போன்ற துறைகளைச் சேர்ந்த பலர் தங்களது துறைகளில் பலசாதனைகளை நிகழ்த்தி, மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளனர். இதனால், அவர்களுக்கு பல ஆதரவாளர்களும், ரசிகர்களும் உள்ளனர். அவர்களால் கூட்டத்தை திரட்ட முடியும். மேலும், அவர்களால் அரசியலில் மாறுபட்ட சிந்தனைகளையும், தொலைநோக்கு பார்வையையும் அளிக்கமுடியும் என்று பா.ஜ.க. மேலிடம் நம்புகிறது.

 

பொது வாழ்வில் சாதனைகளை நிகழ்த்தியவர்களை பாஜக.வுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அவரது உத்தரவுப்படி, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கட்சிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

Leave a Reply